×

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் இடமாற்றம்

 

கோவை, டிச.30: தமிழகம் முழுவதும் 56 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன்,சென்னை டி.ஜி.பி அலுவலக நிர்வாக ஐ.ஜிஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக கோவை மண்டல டிஐஜி யாக பணியாற்றி வரும் சரவண சுந்தர் கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு ஐ.ஜிஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை சரக டி.ஐ.ஜி ஆக சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த ஸ்டாலின்,கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கோவை மாநகர தெற்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த சரவணக்குமார் சென்னை தெற்கு பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தேவநாதன் கோவை மாநகர காவல் துணை கமிஷனராக (வடக்கு) நியமிக்கப்பட்டுள்ளார்.

The post கோவை மாநகர போலீஸ் கமிஷனர் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore City Police ,Commissioner ,Coimbatore ,IPS ,Tamil Nadu ,Balakrishnan ,Coimbatore City ,Police Commissioner ,IG ,Chennai DGP Office ,Coimbatore Zone ,DIG… ,Dinakaran ,
× RELATED ‘பொது அமைதிக்கு குந்தகம்...