- எஸ்ஆர் அவென்யூ குடியிருப்போர் நலச் சங்கம்
- கோயம்புத்தூர்
- கோவை 22வது வார்டு
- 22வது வார்டு
- கவுன்சிலர்
- கோவை பாபு
- க. ஆர்.
- அவென்யூ
- தின மலர்
கோவை, டிச.31: கோவை 22வது வார்டுக்குட்பட்ட எஸ்.ஆர்.அவென்யூ குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு கலந்து கொண்டு எஸ்.ஆர். அவென்யூவில் குடியிருப்போர்களின் தேவைகளை கேட்டறிந்து தீர்வுகளைச் தெரிவித்தார். தொடர்ந்து தமிழக முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில் நடைபெற்று வரும் மக்கள் நலத்திட்டங்களின் காரணமாக 22வது வார்டில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் விரிவாக பேசினார்.
இதில் 22வது வார்டு திமுக வட்ட கழக செயலாளர் பிரபாகரன், முதல்வரின் சிறப்பு கவனத்திட்டமான மகளிர் சுயஉதவிக்குழு திட்டம் குறித்தும், இந்த திட்டத்தை அந்தந்த பகுதி பெண்கள் எவ்வாறு குழுவாக இணைந்து அமைப்பது என்பது குறித்தும், மகளிர் சுயஉதவிக்குழுவின் மூலம் பெண்களுக்கு கிடைக்கும் நற்பலன்கள் குறித்தும் பேசினார். இந்த கூட்டத்தில் திமுக பிரதிநிதி ராஜசேகர், எஸ்.ஆர்.அவென்யூ குடியிருப்போர் நலச் சங்கத்தலைவர் குணவேல், நலச்சங்க நிர்வாகிகள், குடியிருப்புவாசிகள் கலந்து கொண்டனர்.
The post எஸ்.ஆர்.அவென்யூ குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.