×

பொங்கல் பண்டிகையையொட்டி கிராமப்புறங்களில் கோலப்பொடி விற்பனை துவங்கியது

 

மதுக்கரை, ஜன.1: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிராமங்கள் தோறும்,வீடுகளை சுத்தம் செய்து, வெள்ளை அடித்து, வர்ணம் பூசியும். பொங்கலன்று விதவிதமான கோலங்கள் போடுவதுடன், கலர் கோலப்பொடிகளை கொண்டு அதை அழகுபடுத்துவார்கள்.

அதனால் பொங்கல் பண்டிகை வந்தவுடன், கலர் கோலப்பொடியை விற்பனை செய்யும் வியாபாரிகள் கிராமங்களை தேடிச்சென்று விற்பனையில் ஈடுபடுவது வழக்கம். இந்தநிலையில் தற்போது, மதுக்கரை பகுதியில் உள்ள சீரபாளையம், போடிபளையம், அரிசிபாளையம், பிச்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் கலர் கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

The post பொங்கல் பண்டிகையையொட்டி கிராமப்புறங்களில் கோலப்பொடி விற்பனை துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Madukkarai ,Pongal ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்...