- நொய்யால் நதி
- கோயம்புத்தூர்
- நொய்யல்
- கோயம்புத்தூர் மாவட்டம்
- பொதுப்பணித் துறை
- பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி முகமைகள்
- தின மலர்
கோவை, டிச.30: கோவை மாவட்டத்தில் நொய்யல் நீராதாரத்தில் 28 குளங்களும், பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் 200க்கும் மேற்பட்ட குளங்களும், ஊராட்சி, ஊரக வளர்ச்சி முகமை கட்டுபாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர் தேக்கம், கசிவு நீர் குட்டைகளும் உள்ளது. நொய்யல் ஆற்றில் பல இடங்களில் முட்புதர் மரங்கள் வளர்ந்துள்ளன. சில இடங்களில் ஆறு இருப்பதற்கான அடையாளங்கள் கூட தெரியவில்லை.
குறிப்பாக நொய்யலின் ஆரம்ப பகுதியான ஆலாந்துறை, செம்மேடு உள்ளிட்ட பகுதிகளில் கூட புதர் மரங்களை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நொய்யல் கிழக்கு பகுதியில் புதர் மரங்கள் மட்டுமின்றி பல்வேறு கட்டுமான பொருட்களால் மேடாகி வருவதாக தெரியவந்துள்ளது. ஆற்றின் கரைகளை பாதுகாக்க முடியாத அவல நிலை இருக்கிறது. நொய்யல் கரைகளில் மரங்கள் நடும் திட்டம் பல ஆண்டாக இழுபறியில் இருக்கிறது.
முட்புதர்களை அழித்து முகிழ், வேம்பு, அகில், வாகை, கொன்றை உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்க்க பொதுப்பணித்துறை நிர்வாகம் நிதி எதிர்பார்த்துள்ளது. நொய்யல் ஆற்றாங்கரையில் கோவை முதல் ஈரோடு வரை 80 கி.மீ தூரத்திற்கு கரைகளை பலமாக்க வேண்டியிருக்கிறது. ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளும் அதிகமாகி வருகிறது. இதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
The post நொய்யல் ஆற்றில் புதர்மரங்கள் அதிகரிப்பு appeared first on Dinakaran.