- இந்திய ஜனநாயகக் கட்சி
- கோவா
- லெமா ரோஸ் மார்ட்டின்
- இணை பொதுச் செயலாளர்
- அண்ணா பல்கலைக்கழகம்
- அண்ணா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
கோவை, டிச.30: இந்திய ஜனநாயக கட்சியின் இணை பொதுசெயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் கவலையை தருகிறது. தமிழகத்திற்கே எடுத்துகாட்டாக உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில் ஒருவர் கேட் ஏறி குதித்து உள்ளே வந்துள்ளார். மாணவிகளின் பாதுகாப்பு கேள்வக்குறியாக உள்ளது. இதன் பின்னனியில் வேறு யாராவது இருந்தாலும் அவர்களையும் காவல் துறையினர் கைது செய்ய வேண்டும்.
குறிப்பாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தேவை. இது போன்ற குற்றங்களுக்கு தண்டனைகள் அதிகமாக இருந்தால் குற்றம் குறையும். மேலும் இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வரையும், விரைந்து செயல்பட்ட காவல்துறையினரையும் பாராட்டுகிறேன்’’ என்றார்.
The post பலாத்கார சம்பவத்தில் கடும் நடவடிக்கை தேவை: இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி பேட்டி appeared first on Dinakaran.