×

மாற்றுத்திறனாளி குழந்தைகளோடு புத்தாண்டு விழா கொண்டாட்டம்

 

மேட்டுப்பாளையம், டிச.31: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள காரமடை வட்டார வள மையம் சார்பில் நேற்று புத்தாண்டு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மேட்டுப்பாளையம் நகராட்சி இளநிலை உதவியாளர் ஜெயராமன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்டன.

இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டன. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்ந்தனர்.

The post மாற்றுத்திறனாளி குழந்தைகளோடு புத்தாண்டு விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : New Year ,Mettupalayam ,Karamadai Regional Resource Center ,Mettupalayam Government Higher Secondary School ,Integrated School Education Department ,Mettupalayam Municipality ,Junior Assistant ,Jayaraman ,Thiruvalluvar… ,
× RELATED ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு 2025...