×

சூலூர் தாலுகாவில் வளர்ச்சி திட்ட பணி துவக்கம்

 

சூலூர், ஜன.1: சூலூர் தாலுகா சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றியம் செஞ்சேரி, குமாரபாளையம், அருகம்பாளையம், கரையாம்பாளையம், தாளக்கரை, நாயக்கனூர், வலசுபாளையம், செஞ்சேரிபுத்தூர் பகுதிகளில் கான்கிரீட், பேவர் பிளாக், வடிகால் அமைக்க பூமி பூஜை நடந்தது. இப்பணிகளை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், எம்.பி.கணபதி ராஜ்குமார் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர். சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் முத்துமாணிக்கம், மகாலிங்கம் உட்பட் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணியூர், செல்லப்பம்பாளையம் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம், செல்லப்பம்பாளையம் அங்கன்வாடி அருகில் கோபர்தன் (பயோகேஸ்) அமைத்தல், பொன்னான்டம்பாளையம் நூலக கட்டிடம் திறப்பு விழா, மாப்பிள்ளை கவுண்டன் குட்டையில் சிறிய அளவிலான சுகாதார வளாகம், பொன்னான்டம்பாளையம் ஆட்டோமேட்டிக் கேட் வால்வுகள், மாப்பிள்ளை கவுண்டன் குட்டை பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தொட்டி தானியங்கி போர்வெல் மோட்டார் இயக்கம் மற்றும் குமார் நகர் பகுதியில் கலைஞர் சிறுவர் பூங்கா ஆகியவற்றை திமுக மாவட்ட செயலர் தளபதி முருகேசன் மற்றும் எம்பி கணபதி ராஜ்குமார் துவக்கி வைத்தனர். சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு கணியூர் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி துணைத் தலைவர் ராஜு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சூலூர் தாலுகாவில் வளர்ச்சி திட்ட பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Sulur taluka ,Sulur ,Bhoomi Puja ,Sencheri ,Kumarapalayam ,Arugampalayam ,Karaiyampalayam ,Thalakarai ,Nayakkanur ,Valasupalayam ,Sencheriputtur ,Sulur taluka Sultanpet East Union ,South District DMK ,Secretary… ,
× RELATED கொடைக்கானல் தாண்டிக்குடியில் பயணிகள் நிழற்குடை அமைக்க பூமி பூஜை