மாநில நீளம் தாண்டும் போட்டிக்கு தேர்வான மாணவருக்கு பாராட்டு விழா

 

பொன்னமராவதி,அக்.26: மாநில அளவில் நடக்கும் நீளம் தாண்டும் போட்டிக்கு தேர்வான மாவணருக்கு பாராட்டு விழா நடந்தது. பொன்னமராவதி பள்ளி மாணவர் நீளம் தாண்டுதல் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது. பாரதியார் தின, குடியரசு தின மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

நீளம் தாண்டுதல் போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை மேல்நிலைப் பள்ளியின் 12ம் வகுப்பு மாணவன் ஜாஸிம் புதுக்கோட்டை மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை பள்ளியின் முதல்வர் மரியபுஷ்பம் பாராட்டி வாழ்த்தினார். இதில் துணை முதல்வர் பிரின்ஸ் (எ) இளவரன், முதுகலை ஆசிரியர் பாலமுரளி, உடற்கல்வி ஆசிரியர்கள் தேவகணேஷ், மெர்லின் ரம்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாநில நீளம் தாண்டும் போட்டிக்கு தேர்வான மாணவருக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: