நீரவ்மோடியின் கடையை ரூ.48 கோடிக்கு வாங்கிய சோனம் கபூர்

மும்பை: நீரவ் மோடியின் கடையை ரூ.48 கோடிக்கு வாங்கியுள்ளார் பாலிவுட் நடிகை சோனம் கபூர். பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட இந்தியாவில் உள்ள அரசு வங்கிகளில் 28 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப கட்டாமல் மோசடி செய்துவிட்டு பிரிட்டனில் சென்று தங்கி இருக்கும் வைர வியாபாரி நீரவ் மோடிக்கு இந்தியாவில் இருக்கும் சொத்துகளை அமலாக்கப்பிரிவு கையகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது.

நீரவ் மோடிக்கு மும்பையில் மியூசிக் ஸ்டோர் ஒன்று இருந்தது. ரிதம் ஹவுஸ் என்ற பெயரில் இருந்த அக்கடை மிகவும் பழமையானது. 1940ம் ஆண்டு இக்கடை திறக்கப்பட்டது. 3600 சதுர அடி கொண்ட இக்கடை மும்பை காலகோடா பகுதியில் அமைந்துள்ளது. இக்கடையை அமலாக்கப்பிரிவு கடந்த 2020-ம் ஆண்டு கையகப்படுத்தி இருக்கிறது. அதனை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை நீரவ் மோடிக்கு கடன் கொடுத்த வங்கிகளுக்கு கொடுக்கும்படி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

மியூசிக் அனைத்தும் டிஜிட்டல் மயமானதால் கடை வியாபாரம் பாதிக்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக மியூசிக் கடை அடைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இக்கடையை பாலிவுட் நடிகை சோனம் கபூரும், அவரது கணவர் ஆனந்த் அஹுஜாவும் இணைந்து ரூ.47.80 கோடிக்கு விலைக்கு வாங்கி இருக்கின்றனர். சோனம் கபூர், நடிகர் அனில் கபூரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நீரவ்மோடியின் கடையை ரூ.48 கோடிக்கு வாங்கிய சோனம் கபூர் appeared first on Dinakaran.

Related Stories: