டெல்லி காற்று மாசுவால் இன்று நான் வாக்கிங் போகல…தலைமை நீதிபதி வேதனை

புதுடெல்லி: டெல்லியில் அதிகரித்த காற்று மாசுவால் இன்று நான் வாக்கிங் செல்லவில்லை என்று தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களை தலைமை நீதிபதி சந்திரசூட் நேற்று சந்தித்து பேசினார். அப்போது டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து அவர் குறிப்பிட்டார். அவர் கூறுகையில்,’ காற்று மாசு அதிகரிப்பால் நான் இன்று (நேற்று) முதல் காலை நடைப்பயிற்சிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். நான் வழக்கமாக அதிகாலை 4-4.15 மணிக்கு காலை நடைப்பயிற்சி செல்வேன். ஆனால் காற்று மாசு அதிக அளவில் உயர்ந்ததால் எனது நடைபயிற்சியை நான் நிறுத்தி விட்டேன்.

அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கையாளர்கள் இனி உச்ச நீதிமன்ற வளாகத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படும். நீதித்துறை செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குதல், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பல்வேறு பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதில் ஏஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவது நீதிபதிகள் தங்கள் ஐபேட்களிலும், விமானங்களிலும் கூட வழக்குக் கோப்புகளைப் படிக்க உதவியது’ என்றார்.

The post டெல்லி காற்று மாசுவால் இன்று நான் வாக்கிங் போகல…தலைமை நீதிபதி வேதனை appeared first on Dinakaran.

Related Stories: