சமூகவிரோதிகள் உள்ளே வராமல் இருக்க அரசு பள்ளிக்கு இரும்பு கேட்

முத்துப்பேட்டை, அக். 24: முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்கும் விளையாட்டு மைதானத்திற்கும் இடையே பள்ளி ஆசிரியை இரும்பு கேட்அமைத்து கொடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு முன் பகுதியில் மட்டுமே சுற்றுச்சுர் உள்ளது. மற்ற பகுதிக்கு சுற்று சுவர் இல்லை. இதனால் பள்ளி நேரம் முடிந்த பின், மாலை மற்றும் இரவு நேரத்தில், குடி மகன்கள் உள்ளே புகுந்து, மது அருந்தி விட்டு உணவு கழிவுகளை அங்கேயே விட்டுச் சென்றனர்.

இதனை தடுக்கும் வகையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் உடனடியாக சுற்று சுவர் அமைத்து தர வேண்டும் அல்லது தற்காலிகமாக பள்ளி வகுப்பறை பகுதிக்கு சமூக விரோதிகள் வராமல் இருக்க பள்ளி வளாகத்திற்கும் விளையாட்டு மைதானத்திற்கும் இடையே இரும்பு கேட் அமைத்து தர வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை இந்திரா என்பவர் ரூ. 20, 000 மதிப்புள்ள இரும்பு தயார் செய்து அதற்கு வர்ணம் பூசப்பட்டு நேற்று கொடுத்துள்ளார். தலைமை ஆசிரியர் அமுதராசு, உதவி தலைமை ஆசிரியர் பாக்கியராஜ், ஆசிரியர்கள் சுரேஷ், சுருளி ஆண்டவர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைர் சண்முகம், பொருளாளர் நாகராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர் வீரையன், ஆசிரியர் மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

The post சமூகவிரோதிகள் உள்ளே வராமல் இருக்க அரசு பள்ளிக்கு இரும்பு கேட் appeared first on Dinakaran.

Related Stories: