சங்கரன்கோவில் அருகே கனமழையால் சேதமான மின்கம்பங்கள் உடனடியாக மாற்றிஅமைப்பு

சங்கரன்கோவில்,அக்.24: சங்கரன்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக சங்கரன்கோவில் அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தில் 2 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு தமிழக அரசு வருவாய்துறை தலைமையில் பேரிடர் முன்னெச்சரிக்கை குழு நிறுவப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நலன் கருதி நெடுங்குளம் கிராமத்தில் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை சங்கரன்கோவில் மின்சார வாரியம் சங்கரன்கோவில் நகர்புறம் பிரிவு பணியாளர்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் இரண்டு மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த மின்சாரதுறையினருக்கு அந்த கிராம மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

The post சங்கரன்கோவில் அருகே கனமழையால் சேதமான மின்கம்பங்கள் உடனடியாக மாற்றிஅமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: