அருணாச்சல 15 பகுதிகளுக்கு புதுப்பெயர்; சீனா அடாவடி அறிவிப்பு

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசம் தனக்கு சொந்தமான பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. அங்கு இந்திய தலைவர்கள் சென்றால் எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது. மேலும், இந்த மாநிலத்தின் எல்லையில் ஏற்கனவே சில பகுதிகளை சீன ராணுவம் ஆக்கிரமித்து புதிய கிராமங்களை அமைத்து வருகிறது. இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 15 பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதன்படி, மக்கள் குடியிருக்கும் 8 புகுதிகள், 4 மலைகள், 2 ஆறுகள், ஒரு கணவாய் ஆகியவற்றுக்கு சீனா,  ரோமன் எழுத்துகளில் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சீனாவின் அமைச்சரவை கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பும் இதேபோல், கடந்த 2017ம் ஆண்டில் அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு புதிய பெயர்களை சூட்டி, சீனா முதல் பட்டியலை வெளியிட்டது….

The post அருணாச்சல 15 பகுதிகளுக்கு புதுப்பெயர்; சீனா அடாவடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: