சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், மகேந்திராசிட்டி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் தொழிற்சாலை கழிவுகள் இறைச்சி கழிவுகள் உணவக கழிவுகள் காய்கறி கழிவுகளை மகேந்திராசிட்டி பகுதிகளில் தினம் தினம் கொட்டப்பட்டு வருகின்றது. இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மகேந்திராசிட்டி பேருந்து நிலையம் அருகே துர்நாற்றம் வீசி அதிக அளவில் கொசுக்கள் உருவாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகின்றது.
இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் மகேந்திராசிட்டி, வீராபுரம், அஞ்சூர், தென்மேல்பாக்கம் வனப்பகுதியில் இருந்து வரும் மயில்கள் சாலையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உட்கொண்டு பல மயில்கள் வனப்பகுதியில் உயிரிழந்தும் வருவது தொடர் கதையாக இருந்து வருகின்றது. எனவே வனப்பகுதியில் இருந்து வரும் மயில்கள் மற்றும் பறவைகளை சாலை ஓரம் கொட்டப்படும் கழிவுகளை உட்கொண்டு உயிரிழப்பதை தடுக்க சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மகேந்திராசிட்டி பேருந்து நிலையம் அருகே கழிவுகளை கொட்டுவதை தடுக்க வனத்துறையும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
The post சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே கொட்டப்படும் கழிவுகளால் மயில்கள் பறவைகள் இறக்கும் அபாயம்: வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.