சில்லி பாயின்ட்…

* இமாச்சலப் பிரதேச அணியுடன் தர்மசாலாவில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ராஜஸ்தான் 334 மற்றும் 26/2; இமாச்சல் 98 மற்றும் 260.
* ஜார்க்கண்ட் – ரயில்வேஸ், சண்டிகர் – சவுராஷ்டிரா, பஞ்சாப் – மத்தியப் பிரதேசம், அரியானா – உத்தரப் பிரதேசம், கேரளா – கர்நாடகா அணிகளிடையே நடந்த ரஞ்சி லீக் ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
* ஐதராபாத் அணிக்கு எதிராக டேராடூனில் நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில் உத்தரகாண்ட் 78 ரன் வித்தியாசத்தில் வென்றது. உத்தரகாண்ட் 325 மற்றும் 235; ஐதராபாத் 292 மற்றும் 190.
* வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ள ஒருநாள் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, முதல் முறையாக லயம் லிவிங்ஸ்டன் தலைமை பொறுப்பேற்க உள்ளார்.90.
* இந்தியா – நியூசிலாந்து அணிகளிடையே புனேயில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* காயம் காரணமாக ஓய்வில் இருந்த வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில், ‘தற்போது 100 சதவீதம் வலியில் இருந்து விடுபட்டுவிட்டேன். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு முன்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
* ஆந்திரா அணியுடன் அகமதாபாத்தில் நடந்த ரஞ்சி பி பிரிவு லீக் ஆட்டத்தில் குஜராத் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் குஜராத் 367 ரன், ஆந்திரா 213 ரன் எடுத்தன. ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய ஆந்திரா 297 ரன் குவித்தது. 144 ரன் இலக்கை துரத்திய குஜராத் 50.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து வென்றது.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: