தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர்: திமுகவின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தொட்டுக் கூட பார்க்க முடியாது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டிடி தமிழ்’ சார்பில் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்தி மாதம் நிறைவு நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுப் பேசினார்.

இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள ‘தெக்கணும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரி விடப்பட்டு பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் கண்டனம் தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் திண்டுக்கலில் திருமணங்களை நடத்திவைத்த பின் உதயநிதி பேசியதாவது, திமுகவின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தொட்டுக் கூட பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் முயற்சி செய்கின்றனர். நேரடியாக இந்தியை திணிக்க முடியாததால் தமிழ்த்தாய் -வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர். தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சிக்கு பல பேர் துணை போகின்றனர். விடுபட்டோருக்கும் விரைவில் உரிமைத் தொகைவழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

The post தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பியுள்ளனர்: திமுகவின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தொட்டுக் கூட பார்க்க முடியாது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: