திருவாரூர்: திருவாரூரில் பெய்து வரும் கனமழையால், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். திருவாரூர் நகர், தண்டலை, சேந்தமங்கலம், கங்களாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திடீர் மழையால் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.