கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு; அதிகாலை வரை அமித் ஷா ஆலோசனை: மகாராஷ்டிராவில் பரபரப்பு


மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று அதிகாலை வரை அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆளும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) – பாஜக – தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஒரு கூட்டணியாகவும், ‘இந்தியா’ கூட்டணியை சேர்ந்த சிவசேனா (உத்தவ்) – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மற்றொரு கூட்டணியாகவும் களமிறங்கி உள்ளன.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளுக்குமான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது. சில தொகுதிகள் குறித்த முடிவு இன்னும் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ெதாகுதிகள் ஒதுக்கீடு விவகாரத்தை மாநிலத் தலைவர்கள் பேசி முடித்துக் கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இரண்ெடாரு நாளில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு; அதிகாலை வரை அமித் ஷா ஆலோசனை: மகாராஷ்டிராவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: