குத்தாலம் அரசு கல்லூரியில் பங்குச்சந்தையில் வேலை வாய்ப்பு குறித்த கருத்தரங்கம்

 

குத்தாலம்,அக்.18:மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறையில் பங்குச்சந்தையும் அதில் உள்ள வேலை வாய்ப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் சண்முகசுந்தரி தலைமை வகித்தார், மூன்றாம் ஆண்டு மாணவி வர்ஷினி வரவேற்புரை ஆற்றினார்.

பங்குச்சந்தை நிபுணர்கள் பத்ரி நாராயணன் 1980 முதல் இன்று வரை பங்குச்சந்தையின் பரிணாமத்தையும், அதில் உள்ள முதலீட்டுக்கான வாய்ப்புகளையும், சாதக பாதகங்களையும் எடுத்துரைத்தார்கள் மற்றும் கார்த்திக் பங்குச் சந்தையில் இருக்கக்கூடிய துறை வாரியான வேலை வாய்ப்பும் அதற்கு தேவைப்படக்கூடிய தகுதிகளை பற்றியும் விவரித்தனர். இரண்டாம் ஆண்டு மாணவி ரூபிணி நன்றியுரை கூறினார்கள் இக்கருத்தரங்கை வணிகவியல் துறை தலைவர் சிவக்குமார் ஏற்பாடு செய்தார்.

The post குத்தாலம் அரசு கல்லூரியில் பங்குச்சந்தையில் வேலை வாய்ப்பு குறித்த கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: