பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியின் லைசன்ஸ் ரத்து


திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீநாத் பாசி. கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் பிரபல தாதா ஓம் பிரகாஷ் நடத்திய போதை பார்ட்டியில் கலந்து கொண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி நாத் பாசி, கொச்சியில் பைக்கில் சென்ற ஒரு வாலிபர் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் சென்றதாக புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டியது நாத் பாசி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மீது கொச்சி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நாத் பாசியின் லைசென்சை ஒரு மாதத்திற்கு ரத்து செய்து எர்ணாகுளம் ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார்.

The post பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியின் லைசன்ஸ் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: