கரூர், ஜன. 3: கரூர் ரயில்வே நிலையத்தில் கடந்த சில நாட்களாக தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மாநகரின் மையப்பகுதியில் ரயில்வே நிலையம் செயல்படுகிறது. தினமும் 40க்கும் மேற்பட்ட ரயில்கள் கருர் ரயில்வே நிலையம் வழியாக சென்று வருகிறது. கரூரில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களுக்கும் ரயில்வே சேவை உள்ளது.
இந்நிலையில், இந்த ரயில்வே நிலையத்தை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு சார்பில் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயணிகள் இருக்கை, ஒய்வறை சீரமைப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.அந்த வகையில், ரயி ல்வே நிலையத்தின் நுழைவு வாயில் அருகே மேற்கூரையும் அமைக்கும் பணியும் ஒன்றாகும். இதற்காக, கடந்த சில நாட்களாக பணியாளர்கள் நுழைவு வாயில் பகுதியில் இரும்பிலான மேற்கூரை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி முழுமையடையும் போது, மற்ற நகரங்களுக்கு இணையாக கரூர் ரயில்வே நிலையமும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கரூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.