மக்கள் குறை தீர் கூட்டத்தில் ரெங்கநாதபுரம் கேபி குளம் கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கவேண்டும்

கரூர், டிச. 31: ரெங்கநாதபுரம் தெற்கு கிராமம் கேபி குளம் கிராமத்தில் சீரனி அரங்கம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்கவேண்டுமென கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கேபிகுளம் பகுதியினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:
ரெங்கநாதபுரம் தெற்கு கிராமம் கேபி குளம் கிராமத்தை சேர்ந்த மக்களாகிய நாங்கள், எம்ஜிஎன்ஆர்இஜி திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானம், சீரணி அரங்கம் முன்பு அமைப்பதற்கான ஆணை 10 மாதங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இது வரை எந்த வேலைகளும் நடைபெறவில்லை. இதன் காரணமாக, ஊர் பொதுமக்களும், அம்பேத்கர் மன்ற இளைஞர்களாகிய நாங்கள் சிஎம் செல்லுக்கு பலமுறை மனு அளித்துள்ளோம். மேலும், சீரணி அரங்கத்திற்கான மின் இணைப்பும் வழங்கவில்லை. எனவே, துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post மக்கள் குறை தீர் கூட்டத்தில் ரெங்கநாதபுரம் கேபி குளம் கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கவேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: