கரூர், டிச. 30: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில், தாந்தோணிமலை, சணப்பிரட்டி, வேலுசாமிபுரம், பசுபதிபாளையம், இனாம்கரூர் போன்ற பகுதிகளில் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கூடுதல் கவனம் செலுத்தி தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக கரூர் மாவட்டம் முழுதும் பெய்த மழையின் காரணமாக சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டு, பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியின் புறநகர் பகுதியில் அதிகளவு கொசுக்கள் அதிகரித்து மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கி வருகிறது. இந்நிலையில் இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாக, மாநகராட்சி நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் கடந்த சில நாட்களாக பணியாளர்கள் மூலம் ஸ்பிரே மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியின் காரணமாக கொசுக்களின் உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் சந்தோஷமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கரூர் மாநகராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.