வெறிச்சோடிய கலெக்டர் அலுவலகம்; கரூர் மாவட்டம் புதுமைப் பெண் திட்ட துவக்க விழாவில் பற்றட்டைகள் வழங்கல்

கரூர், டிச. 31: புதுமைப் பெண் திட்ட துவக்கவிழாவில் கலெக்டர் தங்கவேல் மாணவிகளுக்கு பற்றட்டைகள் வழங்கினார். இந்த திட்டத்தால் மாணவிகள் சேர்க்கை அதிகரிக்கும் என்று பெண் கல்வி சமுதாயத்தை உயர்த்தும் என்றும் கூறினார்.

தமிழ்நாடு முதல்வர், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ. 1000ம் உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கி வைத்தததை தொடர்ந்து, கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட கலெக்டர் தங்கவேல், மாணவிகளுக்கு வங்கி பற்றட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்வு குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதல்வர், பெண்கள் மேம்பாட்டிற்காக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்காக புதுமைப் பெண் திட்டத்தினை கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த உயர்கல்வி பயில புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரு.1000ம் வழங்கும் திட்டத்தினை தொடங்கிவைத்துள்ளார். இதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் 46 கல்லூரிகளில் பயிலும் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 5244 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். நேற்று, தமிழ்நாடு முதல்வர், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கும் உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டத்தினை வழங்கியதை தொடர்ந்து, 37 கல்லூரிகளில் பயிலும் 1258 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

இந்த திட்டத்தின் நோக்கம், உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகளின் சேர்க்கையை அதிகரிப்பதேயாகும். ஒரு பெண் கல்வி கற்பதன் மூலம் ஒட்டுமொத்த சமுதாயமே முன்னேற்றம் அடையும். எனவே, இத்தகைய சிறப்பு வாய்ந்த திட்டததை பயன்படுத்திக் கொண்டு மாணவிகள் தாங்கள் பயிலும் துறையில் சிறந்த வல்லுநர்களாக உருவாக வேண்டும் என்றார். இந்த நிகழ்வில், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, சமூக நல அலுவலர் சுவாதி, கோட்டாட்சியர் முகமது பைசல், கல்லூரி முதல்வர் சுதா, மண்டல குழு தலைவர் கனகராஜ் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

The post வெறிச்சோடிய கலெக்டர் அலுவலகம்; கரூர் மாவட்டம் புதுமைப் பெண் திட்ட துவக்க விழாவில் பற்றட்டைகள் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: