கரூர்- சேலம் மெயின் ரோட்டில் மன்மங்கலமத்தில் ரூ.14.50 கோடியில் பாலம் கட்டும் பணி

வேலாயுதம்பாளையம், ஜன. 1: கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை மன்மங்கலத்தில் ரூ.14.50 கோடியில் கட்டப்படும் பாலப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டுமென மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்
இந்திய அளவில் தேசிய நெடுஞ்சாலை அதிக கிலோமீட்டர் தூரம் செல்லும் மாவட்டங்களில் கரூரும் ஒன்றாகும். கரூர் மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி கோட்டையில் தொடங்கி கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் முடிகிறது. கரூர் மாவட்டத்தில் காலனி, ஆறுரோடு சுக்காலியூர் ஆண்டாங்கோயில், பெரியார் வளைவு, கரூர்-கோவை ரோடு ரவுண்டானா குளத்துப்பாளையம் ரயில்வே பாலம் அருகில், காதப்பாறை கொங்கு பள்ளி அருகே, எம்.குமாசாமி பொறியியல் கல்லூரி பகுதி, புகளூர் நால்ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி உயர் மட்ட பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் மண்மங்கலம் அருகே கரூர் செம்மடையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜோதிமணி எம்பி ஆகியோர் தீவிர முயற்சியால் ஒரு பாலம் அமைக்கப்பட்டு கடந்த ஓராண்டாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஓராண்டாக கரூர் செம்படை பகுதியில் கனிசமான அளவு விபத்துக்கள் குறைந்துள்ளது. இந்நிலையில் மண்மங்கலம் பகுதி மக்கள் சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே நீண்ட நாட்களாக கரூர் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜோதிமணி எம்பி ஆகியோரிடம் தங்கள் கோரிக்கை வைத்தனர்.

இதன் அடிப்படையில் ரூ.14.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மண்மங்கலம் உயர்மட்ட பாலத்தின் கீழே மக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது பாலம் கட்டும் பணியில் கான்கிரீட் வேலை முழுமையாக நடைபெற்று அதன் பின் சிமெண்ட் சிமெண்ட் கலவை போட்டு ஒன்றரை கிலோ மீட்டர் பகுதிக்கு அணுகு சாலைப்பணி நிறைவு பெற்றுள்ளது. குறிப்பாக பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் மன்மங்கலம் தவிட்டுப்பாளையம் கடம்பங்குறிச்சி ராமேஸ்வரபட்டி கவுண்டம்புதூர் ஒரத்தை ஆகிய பகுதி மக்களுக்கு இந்த பாலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இருப்பினும் மண்மங்கலம் பகுதி பொதுமக்கள் என் எச்7 சாலை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பாகவே கோரிக்கை வைத்த நிலையில் இப்போதுதான் நிறைவு பெற்றிருப்பது ஒரு வரவேற்க தகுந்த செயலாகும். இந்நிலையில் தற்போது பாலம் பணிகள் அனுகு சாலை, கான்க்ரீட் பணிகள் மேல் தள சுற்றுச்சுவர், பாலத்தின் மேல் மின் கம்பங்கள் அமைப்பு ஆகிய பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தற்போது காங்கிரீட் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் பாலத்தின் மேற்பரப்பில் சிமெண்ட் ஜல்லி பரப்பி இந்த பணிகள் தற்போது நிறைய பெற்றுள்ளது.

இன்னும் இரண்டு மூன்று தினங்களில் பாலத்தின் மேல் பகுதியில் நவீன தொழில்நுட்பத்தில் மழை மற்றும் வெயில் நேரத்தில் தாங்கக்கூடிய விதத்தில் தார் சாலை போடப்படுகிறது. இந்த தார் சாலை பணி நிறைவு பெற்றதும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என தெரிகிறது.

The post கரூர்- சேலம் மெயின் ரோட்டில் மன்மங்கலமத்தில் ரூ.14.50 கோடியில் பாலம் கட்டும் பணி appeared first on Dinakaran.

Related Stories: