காரைக்கால் அருகே மீன் பிடி வலையில் சிக்கிய கோயில் கலசம்

 

காரைக்கால், அக்.14: காரைக்கால் அருகே ஏரியில் மீன்பிடித்தவரின் வலையில் கோயில் கலசம் சிக்கியது. காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அடுத்த போலகம் புது காலனி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவர் புதுச்சேரி மாநில தொழில்பேட்டைக்கு சொந்தமான ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று அதிகாலை ஏரியில் மீன் பிடிப்பதற்காக வலை வீசியுள்ளார். அப்போது சுமார் ஒன்றரை அடி உயரம் உள்ள ஒரு செப்பு கோவில் கலசம் சிக்கி உள்ளது.

அதையடுத்து கோவில் கலசத்தை திருபட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். எஸ் பி சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் மரியே கிறிஸ்டின் பால், துணை காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் போலீசார் கலசத்தை யாரோ திருடியோ அல்லது வேறு காரணத்தினாலோ ஏரியில் போட்டு விட்டு சென்றனரா அல்லது எப்படி தண்ணீரில் வந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருப்பட்டினம் போலீசார் கலசத்தை பற்றிய தகவல் தெரிந்தால் காவல்துறையை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

The post காரைக்கால் அருகே மீன் பிடி வலையில் சிக்கிய கோயில் கலசம் appeared first on Dinakaran.

Related Stories: