தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் பரிந்துரை மதரசாக்களுக்கு நிதியுதவி நிறுத்த வேண்டும்: எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி: மதரசாக்களுக்கான நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய(என்சிபிசிஆர்) தலைவர் பிரியங்க் கானுங்கோ, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘கல்வி உரிமை சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் அனைத்து குழந்தைகளுக்கும் முறையான கல்வி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஆர்டிஐ சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் மதரசா வாரியங்களை மூட வேண்டும். வாரியங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்த வேண்டும். மதரசாக்களில் பயின்று வரும் மாணவர்களை முறையான பள்ளிகளில் சேர்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு, காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘‘இந்த நாடு அனைவருக்கும் சொந்தம். ஆனால், சாதி, மதங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி வெறுப்பை வைத்து அரசியல் செய்ய பாஜ நினைக்கிறது. பாஜவின் பாரபட்சமான அரசியல் நீண்டகாலம் நீடிக்காது’’ என்றார்.

The post தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் பரிந்துரை மதரசாக்களுக்கு நிதியுதவி நிறுத்த வேண்டும்: எதிர்க்கட்சிகள் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: