வங்கதேசம், நேபாளம் கூட முன்னேற்றம் உலகளாவிய பட்டினி குறியீடு 105வது இடத்தில் இந்தியா: பாக், ஆப்கனுடன் கவலைக்குரிய பட்டியலில் சேர்ந்தது

புதுடெல்லி: உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா 105 வது இடத்தில் உள்ளது. அயர்லாந்தை சேர்ந்த பொது நல அமைப்பு கன்சர்ன் வேர்ட்வைட் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த வெல் தி ஹங்கர் லைப் ஆகியவை சர்வதேச அளவில் 127 நாடுகளில் உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தது. அந்த அறிக்கையில், சர்வதேச பட்டினி குறியீட்டில் இந்தியா 105 வது இடத்தில் உள்ளது. அதிக மதிப்பெண் மற்றும் ரேங்க் பெற்ற நாடுகள் கடுமையான பட்டினி நெருக்கடியில் உள்ளன. இந்தியா,பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 42 நாடுகள் கவலைக்குரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம்,நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகள் இந்த குறியீட்டில் இந்தியாவை விட சிறந்த நிலையான மிதமான பட்டியலில் உள்ளன.

27.3 மதிப்பெண்களை பெற்றுள்ள இந்தியா கவலைக்குரிய பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு கடுமையாக இருக்கிறது. நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு 13.7 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் குழந்தை வளர்ச்சி குன்றிய விகிதம் 35.5 சதவீதமாகும்.2.9 சதவீத குழந்தைகள் 5வயதுக்கு முன்னரே இறக்கின்றன. 2000 ம் ஆண்டு முதல் குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதில், இந்தியாவில் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு ஒரு தீவிர பிரச்னையாக உள்ளது. இதனால் 2030 ம் ஆண்டுக்குள் உலகளவில் பட்டினியை ஒழிக்கும் இலக்கை அடைய வாய்ப்பில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வங்கதேசம், நேபாளம் கூட முன்னேற்றம் உலகளாவிய பட்டினி குறியீடு 105வது இடத்தில் இந்தியா: பாக், ஆப்கனுடன் கவலைக்குரிய பட்டியலில் சேர்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: