திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: வார்டு உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்

திருப்போரூர், அக்.10: திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் மீது வார்டு உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனால், அந்த ஊராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய மாம்பாக்கம் ஊராட்சி தலைவராக வீராசாமி என்பவர் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் மீது வந்த புகார்களின் அடிப்படையில் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை நிறுத்தி வைத்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அந்த உத்தரவுக்கு தடை பெற்றார்.

இந்நிலையில், துணை தலைவர் உள்ளிட்ட 6 வார்டு உறுப்பினர்கள் சேர்ந்து மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அதை நிறைவேற்ற சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டுமென்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வண்டலூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா தலைமையில் நேற்று மாம்பாக்கம் ஊராட்சியின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி தீர்மானம் நிறைவேற்றி 6 வார்டு உறுப்பினர்களும் கைெயழுத்து போட்டு வழங்கினர். இதையடுத்து, மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் வந்து திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டார். தன் மீது பொய்யாக குற்றச்சாட்டுகளை கூறி ஒன்றிய அதிகாரிகள் தன் பதவியை பறிக்க முயற்சிப்பதாக அவர் பேட்டி அளித்தார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள் தேவியிடம் பொதுமக்கள் மனு ஒன்றை அளித்தனர். அதில் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இந்த மனுவை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைப்பதாகவும், மாவட்ட கலெக்டர் எடுக்கும் முடிவே இறுதியானது என்று தெரிவித்தார். துணை தலைவர் உள்ளிட்ட 6 வார்டு உறுப்பினர்கள் சேர்ந்து மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அதை நிறைவேற்ற சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டுமென்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வண்டலூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா தலைமையில் நேற்று மாம்பாக்கம் ஊராட்சியின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

The post திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: வார்டு உறுப்பினர்கள் கொண்டு வந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: