கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி இரவு அரங்கேரிய இந்த கொடூர சம்பவத்தில் முக்கிய காவல் அதிகாரிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் சிபிஐக்கு மாற்றப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட காவல் அதிகாரிகள் மீது முதற்கட்டமாக 2027 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2-ம் கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையும், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 104 பேரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக இருந்த டிஎஸ்பி அனில்குமார் 51-வது நபராக சாட்சியம் அளித்தார்.
ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் தான் உயிரிழந்ததாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கில் சிபிஐ தரப்பு விசாரணை அதிகாரியான விஜயகுமார் சின்ஹா இந்த மாதம் 16-ம் தேதி சாட்சியம் அளிக்கவுள்ளார். இவரிடம் குற்றசாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணையை நடத்தவுள்ளனர். இந்த குறுக்கு விசாரணை முடிய 2 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. அதன்பின்னர் 4-மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
The post காவலர்கள் தாக்கியதால்தான் ஜெயராஜ் – பென்னிக்ஸ் உயிரிழந்தனர்; முன்னாள் விசாரணை அதிகாரி பரபரப்பு சாட்சியம் appeared first on Dinakaran.