சீந்திரம் அக்கரையில் மார்க்சிஸ்ட் மாநாடு

 

சுசீந்திரம்,அக்.7: சுசீந்திரம் அக்கரையில் கதிர்வேல் நினைவரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய 4 வது மாநாடு நடைபெற்றது. நிகழ்விற்கு கணேசன் தலைமை தாங்கினார். மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக தனீஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அண்மையில் மரணம் அடைந்த இயக்கத்தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், 1964-ம் ஆண்டு கட்சியில் ஏற்பட்ட பிளவு, அதன் பின் பல்வேறு மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தது.இப்போது கூட கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆட்சி நடக்கிறது, அண்மையில் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. உலகில் இன்றும் 21 நாடுகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மாநாட்டில், சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரி பேருந்து நிலையம் பழுது அடைந்து கிடக்கும் நிலையில் அண்மையில் அதனை சீரமைப்பு செய்ய நிதி ஒதுக்கிய பின்பும், மாவட்டம் நிர்வாகம் செயல்படாமல் இருப்பதை கண்டித்து வருகிற 27 ம் தேதி கன்னியாகுமரி பேருந்து நிலையம் முன் கண்டன போராட்டம் நடத்துவது. தேரூர் இரட்டை கொலை நடந்து 13 ஆண்டுகள் கடந்தும். குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாத காவல்துறையின் மெத்தனத்தையும் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

The post சீந்திரம் அக்கரையில் மார்க்சிஸ்ட் மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: