சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்

 

சங்கரன்கோவில்,அக். 7: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். சங்கரன்கோவிலில் வாய்ஸ் ஆப் தென்காசி மற்றும் ராஜபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் போதை ஒழிப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். முன்னதாக சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் தனது குடும்பத்தினருடன் கவர்னர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி எஸ்பி சீனிவாசன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

The post சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: