வெறுப்பை பரப்பும் பாஜவை விரட்டியடிக்க வேண்டும்: இறுதிகட்ட பிரசாரத்தில் ராகுல் காந்தி ஆவேசம்

நூஹ்:அரியானா பேரவை தேர்தல் நாளை நடக்கிறது. இதையொட்டி நூஹ் நகரில் நேற்று நடந்த இறுதி நாள் பிரசாரத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: தற்போது நாட்டில் அன்பு மற்றும் வெறுப்புக்கும் இடையே போட்டி நடக்கிறது. இதில் காங்கிரஸ் அன்பை விதைக்கிறது. பாஜ வெறுப்பை பரப்பி வருகிறது. சகோதரத்துவம் முக்கியமானதாகும். பாஜ, ஆர்எஸ்எஸ் எங்கு சென்றாலும் வெறுப்பை பரப்புகிறார்கள். எந்த ஒரு மாநிலத்துக்கு சென்றாலும் மொழியை பற்றி அவர்கள் பேசுவார்கள். சில இடங்களில் மதத்தை பற்றியும் சில இடங்களில் சாதியை பற்றியும் பேசுகிறார்கள். வெறுப்புணர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியா வெறுப்புணர்வு நாடு அல்ல,இங்கு அன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியா என்பது அன்பின் கடையாகும். வெறுப்புணர்வுக்கான சந்தை அல்ல.

நாட்டில் வெறுப்புணர்வு வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம்.பகையால் நாடு நலிவடைகிறது, வெறுப்பு துக்கத்தையும், அச்சத்தையும் பரப்புகிறது. அன்பு மட்டுமே வெறுப்புக்கு மருந்தாகும்,அன்பு சகோதரத்துவத்தைப் பரப்பும், அன்பினால் நாடு முன்னேறும். நாங்கள் அன்பைப் பற்றி பேசுகிறோம், ஆனால் அவர்கள் நாட்டை உடைக்க வெறுப்பைப் பரப்ப முயற்சிக்கின்றனர். பாஜ, ஆர்எஸ்எஸ் அமைப்பும் அரசியல் சாசனத்தை தாக்குவதிலேயே குறியாக இருக்கின்றனர். அரசியல் சட்டம் இல்லாவிட்டால் ஏழைகளுக்கு எதுவும் இருக்காது. உங்களுடைய நிலம்,பணம் மற்றும் தண்ணீர் ஆகியவை உங்களை விட்டு செல்லும். அவை குறிப்பிட்ட 20 அல்லது 25 நபர்களின் கைகளுக்கு சென்று விடும் என்றார்.

The post வெறுப்பை பரப்பும் பாஜவை விரட்டியடிக்க வேண்டும்: இறுதிகட்ட பிரசாரத்தில் ராகுல் காந்தி ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: