அதே நேரத்தில் இந்தியாவில் மொத்தமாக கையிருப்பில் உள்ள தங்கத்தில் தென் இந்திய பெண்கள் 40%-ஐ கையிருப்பில் வைத்துள்ளதாகவும் குறிப்பாக தமிழ்நாட்டு பெண்களிடம் மட்டும் 6,720 டன் தங்கம் இருப்பதாகவும் அது இந்தியாவின் கையிருப்பில் 28% என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் மகளிர் வைத்துள்ள தங்கம், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய முதன்மையான நாடுகள் வைத்துள்ள தங்கம் கையிருப்பைவிடவும் அதிகம் என்றும் கோல்டு கவுன்சில் கூறியுள்ளது. இந்தியாவின் வருமான வரித்துறை சட்டங்களின் படி மணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம் என்றும் மணமாகாத பெண்களிடம் 250 கிராம் வரையிலும் ஆண்களிடம் 100 கிராம் வரையிலும் தங்கம் இருக்கலாம் என்றும் அனுமதி உள்ளதாகவும் அதனால் தான் இந்தியாவில் பெண்களிடம் தங்கம் அதிகம் இருப்பதாகவும் சர்வதேச கோல்டு கவுன்சிலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post உலகின் மொத்த கையிருப்பில் இந்தியாவின் தங்கம் 11%.. தமிழ்நாட்டு பெண்களிடம் 6,720 டன் இருப்பதாக சர்வதேச கோல்டு கவுன்சில் அறிக்கை!! appeared first on Dinakaran.