ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று இரவு விண்ணில் பாயும் PSLV-C60.. கவுன்டவுன் ஸ்டார்ட்..!!

ஆந்திரப்பிரதேசம்: விண்வெளி ஆய்வு திட்டத்தின் முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலங்கள் PSLV-C60 ராக்கெட்ஸ் மூலமாக இன்று இரவு விண்ணில் செலுத்தப்படுகின்றன. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன்” எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இதற்காக ஸ்பேடெக்ஸ் ஏ -ஸ்பேடெக்ஸ் பி என 2 விண்கலன்களை தனியார் நிறுவன பங்களிப்புடன் இஸ்ரோ வடிவ மைத்துள்ளது. இத இரட்டை விண்கலங்கள் தலா 220 கிலோ எடை கொண்டதாகும். இவை பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வாயிலாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும். ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி நேர கவுன்டவுன் நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிக்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த விண்கலங்கள் புவியில் இருந்து 476 கிலோ மீட்டர் தூரம் கொண்டு ஒவ்வொரு சுற்று பாதைகளில் நிலைநிறுத்தப்பட இருக்கின்றன.

சில மாதங்களுக்கு பிறகு அவற்றை ஒன்றிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் மொத்தம் 66 நாட்கள் நடைபெறும். நிலவிலிருந்து மாதிரி எடுத்து திரும்புதல், இந்திய விண்வெளி மையம் உருவாக்குதல் போன்ற இந்தியாவின் விண்வெளி லட்சியங்களுக்கு இந்த தொழில் நுட்பம் அவசியமாக உள்ளது. இந்த திட்டத்தை வெற்றி கரமாக செயல்படுத்துவதன் மூலம் ஸ்பேஸ் டேக்கிங் தொழில்நுட்பத்தை கொண்ட 4 வது நாடு என்ற பெருமையை இந்தியா அடையும். இதை தவிர ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ்ஃபோர் இயந்திரத்தில் பேயர் என்ற பரிசோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளது.

The post ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று இரவு விண்ணில் பாயும் PSLV-C60.. கவுன்டவுன் ஸ்டார்ட்..!! appeared first on Dinakaran.

Related Stories: