பள்ளிபாளையம், அக்.1: பள்ளிபாளையம் கீழ்காலனி மேம்பாலம் அடியில், இலவச இ-சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் சம்பத் வரவேற்று பேசினார். தலைமை செயற்குழு உறுப்பினர் வெங்கடாஜலம், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் தங்கராஜ், பேரூர் செயலாளர் கார்த்திராஜ், கட்சி நிர்வாகிகள் காடச்சநல்லூர் சந்திரன், அன்புகுமார், கவுன்சிலர் ஜெயமணி முருகேசன், புதுப்பாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கான ஆதார் திருத்தம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், சாதிச்சான்று, இருப்பிடச்சான்று உள்ளிட்ட பணிகள் இலவசமாக செய்து கொடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
The post இலவச இ-சேவை மையம் திறப்பு appeared first on Dinakaran.