அரியானா கொள்ளையரை பிடித்த காவல்துறை பணி பாராட்டுக்குரியது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஓமலூர்: சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில், சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து, நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: நாமக்கல் மாவட்டத்தில் அரியானா கொள்ளையர்களை பிடித்த காவல்துறையினரின் பணி பாராட்டுக்குரியது. தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆண்டுதோறும் 6 சதவீதம் வரி உயர்வு என்ற அறிவிப்பை அரசு திரும்ப பெற வேண்டும்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த 11 மருத்துவக் கல்லூரிகளில், முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு சட்டக் கல்லூரிகளிலும் முதல்வர் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

The post அரியானா கொள்ளையரை பிடித்த காவல்துறை பணி பாராட்டுக்குரியது: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: