தகவலின் பேரில் வந்த போலீசார் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற போது வாகனத்தை நிறுத்தாமல் வாகன ஓட்டி வேகமாக சென்றுள்ளார். இதனால் போலீசார் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று கண்டெய்னர் முன் வாகனத்தை நிறுத்தி முயற்சி செய்தனர் ஆனால் கண்டெய்னர் லாரி போலீசார் மீது மோதும் வகையில் வந்ததால் போலீசார் அருகில் இருந்த கற்களை எடுத்து லாரியை தாக்கினர். இதனால் நிலைகுலைந்து வாகன ஓட்டி லாரியை சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து போலீசார் அந்த வாகனத்தை சூழ்ந்து உள்ளே செல்ல முயற்சி செய்த போது அங்கு சில வட மாநில இளைஞர்கள் துப்பாக்கியுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக கண்டெய்னர் கதவை மூடிவிட்டு மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த கண்காணிப்பாளர் அதிரடி படையினருடன் வந்து வாகனத்தை சுற்றிய வளைத்தனர். இந்த நிலையில் ஈரோட்டிலிருந்து சேலம் செல்லும் சாலையின் போக்குவரத்து தடை செய்யப்பட்டு அந்த கண்டெய்னர் லாரியை சோதனை செய்வதற்காக அரசு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கண்டெய்னர் லாரி கேரளா மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற ஏ.டி.எம் மிஷின் கொள்ளையர்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் நாமக்கல் மாவட்ட போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் துப்பாக்கியுடன் மர்மநபர்கள் வந்த கன்டெய்னர் லாரி தடுத்து நிறுத்தம்..!! appeared first on Dinakaran.