அப்போது திடீரென மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். சக மாணவர்கள் பஸ் நிலையத்தில் கூடிநின்று வேடிக்கை பார்த்தனர். தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை போலீசார் பஸ் நிலையத்திற்கு வந்தனர். போலீசாரைக் கண்டதும் அடிதடியில் ஈடுபட்ட மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். மேலும், மாணவர்கள் அடித்துக்கொண்டதை பஸ் நிலையத்தில் இருந்தவர்களில் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் ஊத்துக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் மாணவர்களிடையே அடிதடி: வீடியோ வைரல் appeared first on Dinakaran.