முத்துமாரியம்மன் கோயில் அறங்காவலர் தேர்வு

பெரம்பலூர், செப். 26: பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டு, சங்குப்பேட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்கு, இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், அறநிலையத்துறையின் உதவி ஆணையர் லெட்சுமணன், செயல் அலுவலர் கோயிந்தராஜ், ஆய்வாளர் தீபலட்சுமி, கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில், பரம்பரை முறை சாரா புதிய அறங் காவலராக கண்ணபிரான் என்பவர் தேர்வு செய்யப் பட்டார்.

தொடர்ந்து நேற்று பெரம்பலூர் மாவட்ட அறங்காவலர் நியமனக்குழுத் தலைவர் ஆ.கலியபெருமாள் முன்னிலையில், முழு மனதோடு பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் முன்னாள் நகராட்சித் தலைவர் ரமேஷ், வழக்கறிஞர் தமிழ்ச் செல்வன், கிராம காரியஸ்தர்கள் சரவணன், சக்கரவர்த்தி, சுப்ரமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு புதிதாக அறங்காவலராக பொறுப் பேற்றுள்ள கண்ண பிரானுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

The post முத்துமாரியம்மன் கோயில் அறங்காவலர் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: