நாளைய சமூகத்தை மாணவர்கள் தான் சமூக நீதியுடன் உருவாக்க வேண்டும்: விழிப்புணர்வு முகாமில் நீதிபதி பேச்சு

திருவாடானை,செப்.27:திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் குடும்ப நலன் சார்ந்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி மணீஷ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மணிமேகலை ஒருங்கிணைத்திருந்தார். சட்ட விழிப்புணர்வு முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு சட்ட நுணுக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், குடும்ப நலன் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்தும் விளக்கி கூறப்பட்டது.

மேலும் இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி மணீஷ்குமார் பேசுகையில்: பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு, குடும்பம் சார்ந்த பிரச்னைகள், கேலி வதைச்சட்டம், போதைப்பொருள் தடுப்பு, பெண்களுக்கான சம உரிமை கோருதல், போக்குவரத்து விதிகளை மீறுதல் உள்ளிட்ட குற்றங்களை தடுப்பது குறித்தும், அதற்குரிய சட்டங்கள் மற்றும் தண்டனைகளை விளக்கி கூறியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இன்றைய மாணவர்கள் தான் நாளைய சமூகத்தை சமூக நீதியுடன் உருவாக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வின் முடிவில் கணிதத்துறை பேராசிரியர் செல்வம் நன்றி கூறினார். மேலும் இந்த நிகழ்வில் வழக்கறிஞர் ராம்குமார், பேராசிரியர்கள் சுரேஷ், சரவணன்,பாலமுருகன், வீரபாண்டி மற்றும் சட்ட தன்னார்வலர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நாளைய சமூகத்தை மாணவர்கள் தான் சமூக நீதியுடன் உருவாக்க வேண்டும்: விழிப்புணர்வு முகாமில் நீதிபதி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: