குறும்பட இயக்குனர்கள் படைப்புகளை அக்.9க்குள் சமர்ப்பிக்க வேண்டும்

திண்டுக்கல், செப். 26: திண்டுக்கல் புத்தக திருவிழாவில் குறும்பட இயக்குநர்கள் தங்களது படைப்புகளை திரையிட அக்.9க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என இலக்கிய கள துணைதலைவர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், இலக்கிய களம், பொது நூலகத்துறை இணைந்து நடத்தும் 71வது திண்டுக்கல் புத்தக திருவிழா அக்.10ம் தேதி முதல் அக்.20ம் தேதி வரை திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். புத்தக திருவிழாவில் தினசரி மாலை சுமார் 6 மணிக்கு பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் அளிக்கும் உரைவீச்சு, சிந்தனை கருத்தரங்கம் நடைபெறும்.

இதில் 126க்கும் மேற்பட்ட அரங்கங்கள், நூற்றுக்கணக்கான பதிப்பாளர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் மல்டிமீடியா புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அக்.19ம் தேதி காலை 11 மணிக்கு குறும்படங்கள் திரையிடல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த குறும்பட இயக்குநர்கள் தங்களது படைப்புகளை திரையிடலாம். குறும்படங்கள் சமூக நீதி, முற்போக்கு, விழிப்புணர்வு சார்ந்ததாகவும், 10 நிமிடங்களுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தங்களது படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்.9ம் தேதி ஆகும். மேலும் விபரங்களுக்கு என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post குறும்பட இயக்குனர்கள் படைப்புகளை அக்.9க்குள் சமர்ப்பிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: