அரசு பஸ் சேவை அவசியம் வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வத்தலக்குண்டு, செப். 26: வத்தலக்குண்டு அருகே உள்ளது கோட்டைப்பட்டி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற சென்றாய பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் கோட்டைப்பட்டி, காமாட்சிபுரம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் 4 கிமீ தூரத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பள்ளி நேரங்களில் மட்டும் ஒரு பஸ் இயக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டது.

இதனால் இப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் பள்ளிக்கு 4 கிமீ நடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் சென்றாய பெருமாள் கோயிலுக்கு வருபவர்கள் பஸ் வசதியின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி மாணவ, மாணவிகள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரசு பஸ் சேவை அவசியம் வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: