மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒன்றிய பாஜ அமைச்சர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆணைக்கிணங்க, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி வழிகாட்டுதல்படி, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எம்பியை மிரட்டும் விதமாகவும் காயங்கள் ஏற்படுத்தும் விதமாகவும் பேசிய ஒன்றிய அமைச்சர் ரவ்னித் பிட்டு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அச்சிறுப்பாக்கம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் என்.கோட்டிஸ்வரன் தலைமையில் அச்சிறுப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அப்போது, அச்சிறுப்பாக்கம் பேரூர் காங்கிரஸ் நகர தலைவர் எ.எம்.திருநாவுக்கரசு, மாவட்ட பொதுச் செயாலளர் எம்.ஜெய்சங்கர், நிர்வாகிகள் வி.ஐயப்பன், என்.தயாளன் எம்.சுந்தரி, பி.மனோகர் ஆகியோர் இருந்தனர். இந்த புகார் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
The post அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒன்றிய பாஜ அமைச்சர் மீது புகார் appeared first on Dinakaran.