சிவகங்கையில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, செப்.24: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, உட்கோட்ட தலைவர் பழனி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மாரி, மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் சதுரகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் சின்னப்பன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.

இதில், தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதைக் கைவிடுவது, 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும், இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட இணை செயலாளர் பயாஸ் அகமது, சாலை ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தையா, தமிழ்நாடு அனைத்து ஓய்வுபெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் பாண்டி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட நலத்துறை விடுதி பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post சிவகங்கையில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: