அமிர்தசரஸ்: பல்வேறு புகார்கள் வந்ததால் பஞ்சாப்பில் 4 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இன்று 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கேபினட் அமைச்சர்களான பால்கவுர் சிங், சேத்தன் சிங் ஜோடமாஜ்ரா, பிரம்ம சங்கர் ஜிம்பா, அன்மோல் ககன் மான் ஆகியோர் திடீரென தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களுக்கு பதிலாக எம்எல்ஏக்கள் தரன்பிரீத் சிங் சோந்த், மொகிந்திர பகத், ஹர்தீப் சிங் முண்டியா, பரிந்திர குமார் கோயல், டாக்டர் ரவ்ஜோத் ஆகியோர் 5 பேர் அமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் பஞ்சாப் ராஜ்பவனில் தொடங்கியுள்ளன. இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்கள் மீது பல்வேறு புகார்கள் வந்ததால், அவர்கள் தங்களது பதவியை ராஜிமானா ெசய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அதனால் அவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு நவம்பரில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post பல்வேறு புகார்கள் வந்ததால் பஞ்சாப்பில் 4 ஆம் ஆத்மி அமைச்சர்கள் ராஜினாமா: இன்று 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு appeared first on Dinakaran.