சென்னை: தமிழகத்தில் நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுரை விமான நிலையத்தில் நேற்றும் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. பாளையங்கோட்டை, ஈரோடு, கரூர், தஞ்சாவூர் 102 டிகிரி, திருச்சி, தூத்துக்குடி 100 டிகிரி வெயில் நிலவியது. இருப்பினும், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக வேலூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 25ம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், இன்றும் நாளையும் தமிழகத்தில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். சென்னையில் 99 டிகிரி வரை வெயில் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.