சென்னை: திமுகவை கம்பீரமாக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் அமர வைத்துள்ளதாக ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் கலைஞர் உரையாற்றினார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக பவள விழா முப்பெரும் விழா பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக பவள விழா – முப்பெரும் விழாவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் கலைஞர் உரையாற்றினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் கலைஞர் உரையாற்றினார்.
அப்போது; திமுகவை கம்பீரமாக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் அமர வைத்துள்ளார். 55 ஆண்டுகளாக கட்சிக்கு அயராது உழைத்தவர் மு.க.ஸ்டாலின். திராவிடச் செம்மலாய் இந்தியாவின் முன்மாதிரி முதலமைச்சராக செயல்பட்டு நல்லுலகம் போற்றும் நாயகராய் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி வழியில் கழக ஆட்சியை சிறப்பாக வழி நடத்துகிறார் மு.க.ஸ்டாலின் என்றும் புகழாரம் சூட்டினார்.
The post திமுகவை கம்பீரமாக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் அமர வைத்துள்ளார்: ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் கலைஞர் உரை appeared first on Dinakaran.