இதையடுத்து அவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடந்த 5ம் தேதி கைது செய்த மீனவர்கள் 12 பேருக்கும் ரூ.3.5கோடி அபராதமும், 6மாத சிறை தண்டனையும் விதித்து இருந்தது. இதையடுத்து தூத்துக்குடி தருவைக்குளத்தில் ஆகஸ்ட் 9ம் தேதி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 22பேரில் 10 பேருக்கு இன்று தலா ரூ.3.5 கோடி அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதித்தது இலங்கை அரசு. இதனை கண்டித்து இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தூத்துக்குடி தருவைக்குளத்து மீனவர்கள் மத்தியில் பெரும் சோகம் நிலவி வருகிறது.
The post மேலும் 10 மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம்: இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா!! appeared first on Dinakaran.