தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், செய்தி மக்கள் தொடர்புத் துறையில் காலியாக இருக்கும் திருப்பூர் மாவட்ட ஓட்டுநர் பணியிடத்திற்கு திரு.ஆனந்தன். திருப்பத்தூர் மாவட்ட ஓட்டுநர் பணியிடத்திற்கு திரு.எம். தமிழரசு ஆகியோரையும், மதுரை மாவட்டத்தில் வாகன சீராளர் பணியிடத்திற்குக் கருணை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள திருமதி.வெ.சித்ராதேவி அவர்களையும் பணி நியமனங்கள் செய்து உரிய ஆணைகளை தலைமைச் செயலகத்தில் இன்று (18.9.2024) நேரில் வழங்கி, வாழ்த்துகள் கூறியதுடன் சிறப்பாகவும் பொறுப்பாகவும் பணிபுரியுமாறும் அறிவுரைகள் வழங்கினார்.இந்நிகழ்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயலாளர் வே.ராஜாராமன், இ.ஆ.ப.. அவர்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு. இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் இயக்குநர்(செய்தி) திரு.எஸ்.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
The post செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 2 வாகன ஓட்டுநர்கள். ஒரு வாகன சீராளருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்!! appeared first on Dinakaran.